செய்துங்கநல்லூரில் கருங்குளம் ஒன்றிய ச.ம.க செயற்குழு கூட்டம் நடந்தது.
கருங்குளம் ஒன்றிய தெற்கு செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் வசவப்பபுரம் முருகன் முன்னிலை வகித்தார். இளைஞர் அணி செயலாளர் யாக்கோப்பு வரவேற்றார். கூட்டத்தில் மாநில துணை செயலாளர் சுந்தர் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் மதுரை நீதி மன்ற உத்தரவின் படி ஸ்ரீவைகுண்டம் தாலுகா , அரசர்குளம் பகுதி நேர ரேசன் கடையை உடனே திறக்க மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவிட வேண்டும், கருங்குளம் & கொங்கராயகுறிச்சி தாமிரபரணி ஆற்று பாலத்தில் மின் விளக்கு அமைக்க வேண்டும், மருதூர் மேலக்கால், கீழக்கால், மணிமுத்தாறு 3 வது மற்றும் 4 வது ரீச் பகுதியில் உள்ள கால்வாய்களை தூர் வாரவேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணை செயலாளர் அந்தோணி சிலுவை, அவை தலைவர் பெருமாள், விவசாய அணி நாரயணன், சபரி செல்வம், சாகுல் அமீது, அமல் ராஜ், சடையகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.