மணக்கரை நடுவக்குறிச்சி கிராமத்துக்கு வாகனங்கள் செல்ல முடியாத சாலையாக இருப்பதால் கிராமம் தீவு போல் அமைந்துள்ளது.
கருங்குளம் ஒன்றியம் மணக்கரை பஞ்சாயத்தில் அமைந்துள்ள கிராமம் நடுவக்குறிச்சி. இந்த கிராமத்தில் 100 வீடுகள் உள்ளன. இந்தக் கிராமத்தில் இருந்து கல்வி, மருத்துவம் உள்பட அடிப்படை வசதிகளுக்கு அருகில் உள்ள ஆறாம்பண்ணை கிராமத்துக்கத்தான் வரவேண்டும். ஆனால் இந்த கிராமத்துக்கு செல்லும் சாலை மிக மோசமாக உள்ளது. இந்த சாலை மிக குறுகலாக உள்ளது. ஒருபுறம் வயற்காடு மற்றும் வாய்க்கால் உள்ள காரணத்தினால் பாதை சுருங்கிபோய் விட்டது. இதனால் ஆட்டோ தவிர மற்ற வாகனங்கள் நடுவக்குறிச்சி ஊருக்கு செல்ல இயலவில்லை.
குறிப்பாக திருமணம் உள்பட நல்ல காரியங்களுக்கு வேன் போன்ற நான்கு சக்கர வாகனத்தினை மெயின் ரோட்டில் விட்டு விட்டு 1 கிலோ மீட்டர் நடந்து சென்று தான் மக்கன் பயன்படுத்த வேண்டியது உள்ளது. இதனால் இந்த கிராமம் தீவு போலவே காட்சியளிக்கிறது.
இதுகுறித்து ஆறாம்பண்ணையை சேர்ந்த சேக் அப்துல் காதர் கூறும் போது, நடுவக்குறிச்சி கிராமத்தில் சுமார் 100 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் சுமார் 1000க்கு மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இவர்கள் கல்வி, மருத்துவம் உள்பட அடிப்படை வசதிகளுக்கு கிராமத்தினை விட்டு வெளியே வரவேண்டியது உள்ளது. ஆனால் நடுவக்குறிச்சி கிராமத்துக்கு செல்லும் சாலை மிக மோசமாக உள்ளது. இந்த சாலையில் ஆட்டோ போன்ற மூன்று சக்கர வாகனங்கள் மட்டுமே செல்கிறது. வேன் மற்றும் பஸ் போன்ற வானங்கள் செல்ல முடியவில்லை. எனவே இந்த கிராம மக்கள் 1 கிலோ மீட்டர் நடந்து வந்து தான் பஸ்ஸாண்டில் வாகனங்களில் ஏற முடிகிறது. எனவே இந்த சாலை யை அகல படுத்தி இருபுறமும் தடுப்பு சுவர் கட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினர்.
நடுவக்குறிச்சி மக்கள் பிரச்சனையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.