சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் அடுத்துள்ள செம்மண்குடியிருப்பைச் சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு இருமகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவரது 2வது மகள் ஜெகதீஷ்வரி (18) மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெகதீஷ்வரி திடீரென மாயமானார். இதுகுறித்து நாராயணன் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டா (பொறுப்பு) ரேணியஸ் ஜேசுபாதம் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று காலை செம்மண்குடியிருப்பில் இருந்து பேய்க்குளம் செல்லும் சாலையோரம் உள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் எஸ்.ஐ.ஆழ்வார் தலைமையிலான போலீசார் சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த பெண் ஜெகதீஷ்வரி என தெரியவந்தது. அவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது யாரேனும் கிணற்றில் தள்ளிவிட்டார்களா? என்பது குறித்து போலீசு£ர் விசாரணை நடத்தி வருகின்றனர்.