தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகிலுள்ள பேய்க்குளத்தில் தொடர்ச்சியாக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒக்கி புயலால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் மணிமுத்தாறு அணையில் 113 அடி தண்ணீர் நிரம்பியது. இதனால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதி விவசாய மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலரால் மணிமுத்தாறு 3வது மற்றும் 4வது ரீச் குளங்களுக்கு தண்ணீர் தர மறுத்து வருகிறார். குறிப்பாக 1வது மற்றும் 2வது ரீச் குளங்களுக்கு அதிகப்படியான பணத்தை பெற்றுக்கொண்டு சுமார் 350 கன அடி தண்ணீரை வழங்கியுள்ளார். இதனால் கோமநேரி குளத்துப்பாசன விவசாயிகள் பொதுப்பணித்துறை மற்றும் மூலக்கரைப்பட்டி அதிகாரிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100க்கும் மேற்பட்ட விவசாய மக்கள் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்.