தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி புனித அந்தோனியர் திருத்தல பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் கடைசி செவ்வாய் கிழமை நடைபெறும். இந்தாண்டு ஜனவரி 25 வியாழக்கிழமையன்று கொடியேற்ற விழா நடைபெற்றது. திருப்பலி மற்றும் கொடியேற்ற நிகழ்வினை முனைவர்ச.அந்தோனிசாமி தலைமையேற்று நடத்தினார்.பின்னர் உடையார்பட்டி பங்குத்தந்தை அருட்திருமுனைவர் ஜோமிக்ஸ் மறையுரையாற்றினார். இதில் பாளையங்கோட்டை, தூத்துக்குடி மறைமாவட்டத்தை சேர்ந்த எண்ணற்ற குருமார்கள் கலந்து கொண்டு ஜெபித்தனர்.மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல் மதுரை, ராமநாதபுரம், சென்னை போன்ற இடங்களிலிருந்தும் மும்பை, கொல்கத்தா போன்ற வட மாநிலத்தவர்களும் கலந்து கொண்டு புனிதரின் அருளாசியை பெற்று சென்றனர்.
இந்த திருவிழாவானது 13 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். திருவிழா நாட்களின் போது ஒவ்வொரு நாள் காலை மாலை பொழுதுகளில் 6மணியளவில் திருப்பலியும் நற்கருணை ஆசிரும் நடைபெறுகின்றன. 4.02.2018 அன்று சிறப்பு நிகழ்வாக நற்கருணை பவனியும், 05.02.2018 அன்றுஅந்தோனியார் சப்பரபவனியும் நடைபெறுகிறது. 06.02.2018 தை கடைசி செவ்வாய்கிழமையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.