
சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9,10ஆம் வகுப்பு மாணவர், மாணவிகளுக்கு மேற்படிப்பு வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற்றது.
பயிற்சிக்கு தலைமை ஆசிரியர் மரியஜான் பிரிட்டோ தலைமை வகித்தார். ஆசிரியை ஜான்சிராணி வரவேற்றார். ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ராபர்ட், மாணவர்களின் இலக்கு எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்தும், ஆங்கில ஆசிரியர் ஏனோக் பிரபு, தொழிற்சார்ந்த கல்வி மேற்படிப்பு, வேலைவாய்ப்பு குறித்தும், கணித ஆசிரியை ஏஞ்சலா, அறிவியல் துறை சார்ந்த படிப்பு குறித்தும், ஆய்வக உதவியாளர் கார்த்திகா மத்திய, மாநில தேர்வு படிப்பு குறித்தும், ஆசிரியர் சிவக்குமார் கலைத்துறை சார்ந்த படிப்பு குறித்து விளக்கிப் பேசினர். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் தொகுத்து வழங்கினார்.
இதில், ஆசிரியர்கள் ஜேனட் அமலஅருள்ஜோதி, எஸ்தர் ராஜமேரி, மவுண்ட்ரோஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அறிவியல் ஆசிரியை லிலிதியாள் நன்றி கூறினார்.