செய்துங்கநல்லூர் அருகே உள்ள நாட்டார்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தில் பொங்கல் விழா நடந்தது.
நாட்டார்குளம் ஆர்.சி. பங்குக்கு உள்பட்ட கிறிஸ்தவ ஆலயத்தில் ஆண்டுதோறும் பொங்கல் விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு கீழநாட்டார்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தில் ஊர் மக்கள் கூடி பொங்கல் வைத்தனர். இதில் சுமார் 100க்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். இதற்கான சிறப்பு திருப்பலி ஆலய வளாகத்தில் நடந்தது. பங்கு தந்தை இருதயராஜ் திருப்பலியை நடத்தினார். தொடர்ந்து மக்கள் பொங்கிலிட்டனர். குலவையிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் . அதன்பின் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
இரண்டாவது நாளாக மாட்டுப்பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு விவசாயிகள் தங்கள் மாடுகள் உள்பட கால்நடைகளை அலங்கரித்து புனிதசூசையப்பர் ஆலயத்திற்கு முன்பு கொண்டு வந்தனர். சிறப்பு திருப்பலி முடிந்து அதன் பின் மாடுகளை அர்ச்சித்தனர். அதன்பின் விளையாட்டுப்போட்டிகள் நடந்தது. இந்த போட்டியை பங்கு தந்தை இருதயராஜ் துவக்கி வைத்தார்.
இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.