
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் ஆகியோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி, மனித சங்கிலி, வாக்காளர் உறுதிமொழி என பல்வேறு நிகழ்வுகள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான என்.வெங்கடேஷ் ஆலோசனையின்படி ஸ்ரீவைகுண்டம் வட்டம் பத்மநாபமங்கலத்தில் உள்ள குமரகுருபரர் கலைகல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியும், மனிதசங்கிலியும் நடைபெற்றது. பேரணியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் மற்றும் அலுவலகர்களுடன் கல்லூரி வளாகத்தில் நேர்மையாக வாக்களிக்க வாக்காளர்களின் உறுதி மொழி ஏற்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற நிகழ்வின் போது ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் தாமஸ் பயஸ் அருள் தலைமையேற்று தேர்தல் சம்பந்தமாக வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்தல், நீக்கல், திருத்தம் குறித்து அலுவலர்கள் விளக்க உரையாற்றினர். வாக்காளர் குறித்த பேச்சுப் போட்டியில் 2-வது பரிசு பெற்ற குமரகுருபரர் கலைக் கல்லூரி மாணவி சிவகாமி சுந்திரிக்கும் கட்டுரை போட்டியில் முதல் பரிசு பெற்ற குமரகுருபரர் கலைக் கல்லூரி மாணவி இசக்கியம்மாளுக்கும், வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் குறித்த தேர்தல் பணியில் சிறப்பாக பணியாற்றிய சேரகுளம் அங்கன்வாடி பணியாளர் ராமலெட்சுமிக்கும் பரிசுகளை வட்டாட்சியர் தாமஸ் பயஸ் அருள் வழங்கினார்
நிகழ்வில் கல்லூரி முதல்வர் பேரா.ரவிசந்திரன், ஸ்ரீவைகுண்டம் துணை வட்டாட்சியர் (தேர்தல்) சங்கரநாராயணன், மண்டல துணை வட்டாட்சியர் முருகேசன், வருவாய் ஆய்வாளர் பாண்டியராஐன், தேர்தல் பிரிவு உதவியாளர் முத்துராமன் அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.