
தொழிற்சாலைகளில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என ஆட்சியர் என்.வெங்கடேஷ் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. பொதுமக்களிடம் ஆட்சியர் என்.வெங்கடேஷ் மனுக்களை பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் அமமா இருசக்கர வாகன திட்டத்தில் இதுவரை 3,487பேர் விண்ணப்பம் பெற்றுள்ளனர். அதில், 1816பேர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 2534பேருக்கு வாகனம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தையில் செயல்படுத்த முதற்கட்ட ஆய்வுப் பணிகள் முடிந்துள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 60மிலலியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். உடன்குடியில் துவங்க உள்ள சூப்பர் கிரெடிக்கல் தெர்மல் பவர் ஸ்டஷனிலும் கடல் நீர் பயன்படுத்தப்பட உள்ளது. அங்கு ஒரு நாளைக்கு 26,700 மில்லியன் லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதற்கான நிலம் எடுப்பு மற்றும், வழித்தடம் அமைக்கும் பணிக்கான ஆய்வுப்பணிகள் முடிந்துவிட்டது. கடல்நீரை நன்னீராக்கும் திட்டதை செயல்படுத்த பல தொழில் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. தொழிற்சாலைகளில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தைப் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் பூரண ஒத்துழைப்பு அளிக்கும் என ஆட்சியர் தெரிவித்தார்.