தூத்துக்குடி மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் வருகிற 27ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சார்பில், மார்ச் மாதத்துக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் வருகிற 27ம் தேதி ஜார்ஜ் ரோட்டில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.
தடகளம் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில், 100m, 400m, 1500m, Long Jump, Triple Jump, Shotput, Discuss Throw ஆகிய போட்டிகளும் நடத்தப்படுகிறது. நீச்சல் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில், 50 Mts., 100 Mts., 200 Mts., 400 Mts., Free Style, 50 Back Stroke, 50 Mts, Breast Stroke, 50 Butterfly Stroke and 200 Mts., Individual Medley ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும், ஆண்களுக்கு வாலிபால் போட்டிகளும், பெண்களுக்கு ஸ்குவாஷ் போட்டிகளும் நடத்தப்படுகிறது.
போட்டியில் கலந்துகொள்ள வயது வரம்பு இல்லை. இந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள எந்தவிதமான தினப்படியோ பயணப்படியோ வழங்கப்படமாட்டாது.போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டிகளில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் 27.03.2018 காலை 8.30 மணிக்கு மாவட்ட விளையாட்டரங்கத்துக்கு நேரில் வர வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.