தட்டார்மடம் அருகே பைக்கில் சென்ற வாலிபர் பாலத்தில் மோதி பரிதாபமாக பலியானார்.
இதுபற்றி போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது. தட்டார்மடம் அருகேயுள்ள பிச்சிவிளையைச் சேர்ந்தவர் கணபதி இவருடைய ஒரே மகன் பாஸ்கர்(30). திருமணமாகவில்லை. இவர் நேற்று முன்தினம் இரவு மணிநகரிலிருந்து தட்டார்மடத்திற்கு பைக்கில் சென்றாராம். மணிநகர் புதூர் பாலம் வேலை நடப்பதால் தெற்கு உடைபிறப்பு மாற்று பாதை வழியாக சென்றாராம். அதில் செல்லும் பொழுது எதிர்பாராதவிதமாக பாலம் தடுப்புச் சுவற்றில் மோதி பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் தட்டார்மடம் போலீசிற்கு தகவல் கொடுத்தனர்.
தட்டார்மடம் போலீசார் விரைந்து சென்று பாஸ்கர் உடலை கைபற்றி சாத்தான்குளம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு இராமகிருஸ்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.