
ஞானியார்குடியிருப்பு விலக்கில் பழுதடைந்துள்ள சோலார் மின்விளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சிக்குள்பட்ட ஞானியார்குடியிருப்பு விலக்கில் பேருந்து நிறுத்தம் அருகே நாகர்கோவில் செல்லும் பிரதான சாலையோரம் சூரிய சக்தி சோலார் மின் விளக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு அமைக்கப்பட்டது. சுமார் ஒரு மாதம் மட்டுமே பயன்பட்டு வந்த நிலையில், சுமார் 5 மாதங்களாக இந்த விளக்கு எரியாமல் உள்ளது. அதற்கு காரணம் அதிலிருந்த பேட்டரி காணாமல் போனதே காரணம் என கூறப்படுகிறது. எனவே, அந்த மின்கம்பத்தில் திருடுபோகாத வண்ணம் பேட்டரி அமைத்து, விளக்கை ஒளிரச் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.