செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் 34வது ஆண்டு துவக்கவிழா நடந்தது. செயிண்ட் மேரீஸ் கல்வியல் கல்லூரி தாளாளர் அந்தோணி பெர்ணான்டோ வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன், பாளையங்கோட்டை தூய சேவியர் கல்லூரி ரெக்டர் டாக்டர் ஹென்றி ஜெரோம் சிறப்புரையாற்றினர்.
முதலாமாண்டு துறை தலைவர் வெங்கடேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சியை ஆங்கில துறை விரிவுரையாளர்கள் மரிய பிந்து, புஷ்பா ஆகியோர் தொகுத்து வழங்கினர். துணை முதல்வர் அன்சலாம் ரோசர், துறைத்தலைவர்கள் அமலன், ஜாய்ஸ் மேரி, ஜான் செண்பகத்துரை, ரோசால் புஷ்பா, அலுவலக கண்காணிப்பாளர் கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக நடந்த சிறப்பு திருப்பலியில் அருட்தந்தை டாக்டர் ஹென்றி ஜெரோம், செய்துங்கநல்லூர் பங்கு தந்தை ஆரோக்கிய லாசர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.