
செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் செஞ்சிலுவை சங்கம் சார்பில் மாணவர்களுக்கான எய்ட்ஸ் சிறப்பு முகாம் நடந்தது.
கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். துணை முதல்வர் அன்சலாம் ரோசர் முன்னிலை வகித்தார். மூன்றாம் ஆண்டு மாணவர் லெட்சுணன் வரவேற்றார். மாவட்ட எய்ட்ஸ் திட்ட மேலாளர் அமலவளன் பேசினர். மாணவர்களிடம் எய்ட்ஸ் குறித்தும், எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கை குறித்தும் அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியை மூன்றாம் ஆண்டு மாணவர் ஸ்டெனிபர் தொகுத்து வழங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆறுமுகசேகர் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.