
செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. முகாமில் நூற்றுகணக்கான மாணவர்கள் ரத்த தானம் வழங்கினர்.
கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். துணை முதல்வர் அன்சலாம் ரோசர் முன்னிலை வகித்தார். முதன்மை குடியுரிமை மருத்துவ அலுவலர் டாக்டர் மார்க்ரெட் பௌலா மேரி முகாமை துவக்கி வைத்தார்.
திருநெல்வேலி அரசு மருத்துவமனை டாக்டர் கமலா நேரு தலைமையில் கருங்குளம் அரசு மருத்துவமனை டாக்டர் முகம்மது ரிப்பான், டாக்டர் தினேஷ் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் ரத்தம் சேகரித்தனர்.
சுகாதர ஆய்வாளர் சீனிவாசன், சண்முகபெருமாள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆறுமுகசேகர், செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் சிவபெருமாள், விளையாட்டு துறை ஆசிரியர் ராகுல், அலுவலக கண்காணிப்பாளர் கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட துணை இயக்குனர் சுகாதர பணி டாக்டர் கீதாராணி மற்றும் கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டிபன் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.