செய்துங்கநல்லூர் சந்தையில் சுகாதார துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அழுகிய பழம் விற்ற வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செய்துங்கநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்றது புதன்கிழமை சந்தை. இந்த சந்தையில் சுமார் 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான பொதுமககள் இந்த சந்தையில் கூடுவார்கள். நேற்று காலை 10 மணி அளவில் இந்த சந்தையில் சுகாதாரதுறையினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்கு வட்டார மேற்பார்வையாளர் பெரியசாமி தலைமை வகித்தார். சுகாதர ஆய்வாளர்கள் சீனிவாசன், சண்முகபெருமாள், ஜாகீர், பரீத், வைகுண்டத்தான் ஆகியோர் கொண்ட குழுவினர் கடை கடையாக சென்று ஆய்வு செய்தனர். இதில் பிளாஸ்டிக பொருள் வைத்திருந்தவர்கள் மீது நடவடிககை எடுததனர். மேலும் அழுகிய பழம் விற்ற வியாபாரிகளுக்கு அபாராதம் விதிககப்பட்டது.
மேலும் பாதுகாப்பாக உணவு பொருள்களை வைத்து விற்பனை செய்யவேண்டும் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. திடிரென சுகாதர அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.