செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் ஹெல்மெட் அணிய ஆலோசனை கூட்டம் நடந்தது.
இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன் தலைமை வகித்தார். சப்இன்ஸ்பெக்டர் சதீஷ் முன்னிலை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர் ரவிகுமார் வரவேற்றார். இந்த கூட்டத்தில் செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூர் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஹெல்மெட் அணிவதின் அவசியம். பின்புறம் அமர்ந்திருப்போரும் கட்டயம் ஹெல்மெட் அணிய ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பு குறித்தும் கலந்தாய்வு செய்யப்பட்டது.