செய்துங்கநல்லூரில் விளையாட்டு போட்டி நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டிவி உள்பட பரிசுகள் வழங்கப்பட்டது.
செய்துங்கநல்லூர் நம்பி சாமி கோயில் இளைஞர் அணியினர் மற்றும் பாசப் பறவைகள் குழுவினர் இணைந்து நடத்திய விளையாட்டு போட்டி நடந்தது.
இதையொட்டி கோலப்போட்டி, சிறந்த தம்பதிகள் போட்டி, உள்பட பல விளையாட்டு போட்டிகள் நடந்தது. பரிசளிப்பு விழா கோயில் வளாகத்தில் நடந்தது. சுந்தரம் தலைமை வகித்தார். சுடலைகண்ணு, பிள்ளைவனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டிவி உள்பட பல பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் ராஜ்பாண்டியன், சோமசுந்தரம் என்ற குட்டி, கருப்பசாமி, சோமசுந்தரம் என்ற மாரி, வேலவன் குமார், மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.