செய்துங்கநல்லூரில் இந்தியகம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் 22 வது தமிழ்நாடு மாநில மாநாடு வருகிற பிப்ரவரி 17 முதல் 20 ந்தேதி வரை தூத்துக்குடியில் நடைபெறுகிறது.
இதுகுறித்து பிரச்சார கூட்டம் செய்துங்கநல்லூரில் நடந்தது. கிளை செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அப்துல்காதர், செல்லையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்து சிப்பி பாரதி கலைக்குழுவின் பிரச்சாரம், விழிப்புணர்வு நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சி நடந்தது. சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் மாரியப்பன், கருங்குளம் ஒன்றிய செயலாளர் அப்பாகுட்டி, ஆழ்வை ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் பேசினர்.
ஒன்றியகுழு உறுப்பினர்கள் குணேஸ்வரி, கண்ணன், ராஜ்குமார், கொ£ம்பையா, மாதர்சங்க ஒன்றிய தலைவர் மாரியம்மாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சின்னத்துரை, ஒன்றியக்குழு உறுப்பனிர்கள் நடராஜன் கால்வாய் முருகன், ஒன்றியச் செயலாளர் பெருமாள், சின்னத்துரை, சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.