செய்துங்கநல்லூரில் மார்கழி பஜனை விழா நடந்தது. இதையொட்டி தினமும் அதிகாலையில் சோமசுந்தர விநாயகர் கோயிலில் சிறப்பு அபிசேகம் அலங்காரம் ஆராதனை நடந்தது. அதன் பின் மார்கழி பஜனை குழுவினர் பஜனை பாடல் பாடிய படி மூப்பனார் தெரு, குழலியம்மன் கோயில் தெரு, புது தெரு, சோமசுந்தர விநாயகர் கோயில் தெரு உள்பட தெருக்களில் பஜனை பாடினர். பூஜை ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் கணேச பட்டர் செய்திருந்தார். இருவப்பபுரம் பெரும்படை சாஸ்தா திருப்பணி குழு தலைவர் பெருமாள் இவர்களை வரவேற்றார். அவருடன் ஆவுடையப்பன் என்ற சங்கரன் உள்பட பலர் இருந்தனர். பஜனை ஏற்பாடுகளை இசக்கி ராஜா, பரமசக்தி வேல், ராமசாமி, ஸ்ரீராம் உள்பட பஜனை குழுவினர் செய்திருந்தனர்.
படம் உள்ளது.
செய்துங்கநல்லூரில் மார்கழி பஜனை குழுவினர் பஜனை பாடியபடி சென்றனர்.