செய்துங்கநல்லூரில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போலிசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய குழு செயலாளர் அப்பாக்குட்டி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்ராஜ் சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடியில் செங்கொடி தொண்டர்கள் மீது தாக்குதல் நத்திய ஏ.,எஸ்.பி செல்வ நாகரத்தினத்தினை பணி நீக்கம் செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆழ்வார் திருநகரி ஒன்றிய செயலாளர் ரவிசந்திரன், கருங்குளம் ஒன்றிய குழு உறுப்பினர் குணேஷ்வரி, கொம்பையா, கண்ணன், மணி, ஞானமுத்து ஆகியோர் பேசினர். கிளை செயலாளர்கள் மாரியம்மாள், முருகன், ராமசந்திரன் வண்டிமலையான் உள்பட பலர் கலந்து கொண்டனர். செல்லையா நன்றி கூறினார்.