திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பறவை காவடி எடுத்து வந்த பரவசமூட்டிய பக்தர் விவரம் வருமாறு.
திருச்செந்தூர் முருகன் கோயில் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடு. வங்க கடலோரம் உள்ள இந்த ஆலயத்தில் தை மாதப்பிறப்பு, தைபூசம், மாசி மகம், சிவராத்திரி, சித்திரை வருட பிறப்பு, சித்திரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆனி உத்திரம், ஆடி தபசு, ஐப்பசி திருக்கல்யாணம், திருக்கார்த்தினை, மார்கழி உற்சவம் பல திருவிழாக்களுக்கு பக்கர்கள் கூட்டம் ஊட்டமாக சென்று வருவார்கள். பலர் வித்தியாசமான நேர்ச்சைகளை நேர்ந்து முருகப்பெருமானிடம் கொண்டு சேர்ப்பார்கள்.
பெரும்பாலுமே முருகனுக்கு காவடி எடுத்து செல்லும் நிகழ்ச்சி மிகவும் வித்தியசமானதாகும். அதிலும் பறவை காவடி, சர்ப்ப காவடி போன்றவற்றை ஒரு சில அபூர்வ பக்தர்களே எடுத்து செல்வார்கள். அதுபோலவே நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் & திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் பாதயாத்திரை குழுவினர் இந்த வருடம் வித்தியாசமான நேர்ச்சை ஒன்றை நிறைவேற்றினர். அதில் முருகன் என்பவர் பறவை காவடி எடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. அதன் படி ஆலடிபட்டி வைத்திய லிங்க சுவாமி கோயிலில் இருந்து திருச்செந்தூர் வரை முருகன் என்ற பக்தர் பறவைகாவடி எடுத்தார்.
முதுகில் கொக்கி போட்டு அவர் பறப்பது போல இருக்க, மினி வேன் ஒன்றில் தொங்கிய படி முருகன் சென்றார். முருகனுக்கு ஆரோஹரா கந்தனுக்கு ஆரோஹரா என பக்தி பரவசத்துடன் அனைவரும் கோஷம் எழுப்பினர் இவரை செய்துங்கநல்லூர், கருங்குளம் உள்பட பலபகுதியில் பக்தர்கள் பரவசத்துடன் கண்டு களித்து வரவேற்றனர்.