செய்துங்கநல்லூரில் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடந்தது.
முன்னாள்கவுன்சிலர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கிளை கழக செயலாளர் செய்துங்கநல்லூர் அண்ணாமலை, தூதுகுழி செந்தாமரை, அய்யனார்குளம்பட்டி சுப்பையாபாண்டியனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். கருங்குளம் இளைஞர் பாசறை செயலாளர் கதிரரேசன், கிளைசெயலாளர்கள் நாட்டார்குளம் ஆறுமுகம், விட்டிலாபுரம் சோமசுந்தரம், ஆனந்த கணபதி, பூ. திருவரங்கம், அனந்த நம்பிகுறிச்சி பாபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.