செய்துங்கநல்லூரில் அருகே காதலியை மற்றொருவருக்கு நிச்சயம் செய்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்துங்கநல்லூர் அருகே முத்தாலங்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் சுடலை மகன் முருகப்பெருமாள்(26). இவர் தூத்துக்குடியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இதே ஊரை சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் காதல் இருந்து வந்துள்ளது. இதற்கிடையில் கடந்த ஞாயிற்றுகிழமை அந்த பெண்ணுக்கு நிச்சயம் நடந்துள்ளது. இதனால் மனமுடைந்த முருகப்பெருமாள் நேற்று முன்தினம் பூச்சி மருந்தை குடித்து விட்டார். மிக மோசமான நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவ மனையில் அவரை சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு சிகிச்சசை பலனளிக்காமல் இறந்தார். இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலிசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில் முருகப்பெருமாளின் உறவினர்கள் , அவரை தற்கொலைக்கு துண்டியதாக 4 பேர் மீது புகார் கொடுத்தனர். அந்த புகார் மீது நடவடிக்கை எடுத்த இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன் அவ்வூரை சேர்ந்த நல்லையா, மணிமேகலை, சங்கரைய்யா என்ற மூக்காண்டி, பேச்சியம்மாள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.