செய்துங்கநல்லூரில் அனுமதி இன்றி கொடியேற்ற வந்த கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை போலிசார் தடுத்த காரணத்தினால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்துங்கநல்லூர் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கூட்டம் நேற்று மாலை 5 மணி அளவில் செயற்குழு கூட்டம் நடைபெறவிருந்தது. அதன் முதல் கட்டமாக தூத்துக்குடி மாவட்ட தலைவர் ரூமான் தலைமையில் 15 பேர் கொடியேற்ற செய்துங்கநல்லூர் பஜாருக்கு கூட்டமாக வந்தனர். பின் அவர்கள் கோஷமிட்டபடி கொடியேற்ற முயன்றனர். அப்போது அங்கு வந்த செய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் அனுமதி இன்றி கொடியேற்றக்கூடாது என தடுத்தார். ஆனால் அதையும் மீறி அவர்கள் கொடியேற்ற முயன்றனர். இருதரப்பினருக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் செய்துங்கநல்லூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன் இது குறித்து வழக்கு பதிவு செய்து, ரூமான் உள்பட 15 பேர் மீது வழக்குபதிவு செய்தார்.