
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட செக்காரக்குடியில் தமிழர் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் பெரிய மாட்டு வண்டி பந்தையத்தில் மறுகால் குறிச்சி சுப்பம்மாள் மாட்டு வண்டியும், சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் பாளை டி.எஸ்.பி வெங்கடேஷ் மாட்டு வண்டியும் முதலிடம் பெற்றன.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்காக தடை நீக்கப்பட்ட பின்பு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் மற்றும் மாட்டு வண்டி பந்தயங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் தமிழர் திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி என்ற 2 பிரிவில் நடைபெற்றது. செக்காரக்குடி – பொட்டலுரானி விளக்கு வரை சென்று கொடியை வாங்கிக்கொண்டு மீண்டும் செக்காரக்குடி வரை நடைபெற்ற இந்த போட்டியில் பெரிய மாட்டு வண்டி 14கி.மிட்டர் தொலைத்தூரம் நடைபெற்றதில் 11 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டது. இதில் மறுகால்குறிச்சி சுப்பம்மாள் மாட்டு வண்டி முதலிடத்தினை பிடித்தது. மறுகால் குறிச்சி எஸ்.பொன்னையா மாட்டு வண்டி 2வது இடத்தையும், மூலக்கரை கணபதி தேவர் என்பவரது மாட்டு வண்டி 3வது இடத்தினையும் பிடித்தது.
தொடர்ந்து சிறிய மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது.10 கி.மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போட்டியில் 14 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டது. இதில் பாளை டி.எஸ்.பி வெங்கடேஷ் மாட்டு வண்டி முதல் இடத்தினையும், வடக்கு காரசேரி ஓடக்கரையான் கனகராஜ் மாட்டு வண்டி 2வது இடத்தினையும், சொக்கலிங்கபுரதை சேர்ந்த முத்து – பாலமுருகன் மாட்டு வண்டி 3வது இடத்தினையும், பிடித்தது. இந்த போட்டிகளை வ.உ.சி இரத்ததான கழக தலைவர் சரவணபெருமாள் துவக்கி வைத்தார். செக்காரக்குடி முன்னாள் ஒன்றிய துணை தலைவர் அய்யம் பெருமாள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.