சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்போருக்கு – பரிசு மற்றும் நற்சான்றிதழ் வழங்கும் விழா மாவட்ட எஸ்.பி மகேந்திரன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது,
தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாகவும், சாலை விபத்துகளை தவிர்க்கும் விதமாகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், ஒரு புதிய முயற்சியாக, சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்போருக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் கலந்து கொள்ளும் வாகன ஓட்டிகள் செய்ய வேண்டியவை:
தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் வாகன ஓட்டுநர் உரிமத்தையும் காண்பித்து தங்களது முகவரி மற்றும் தொலைபேசி எண்ணைக் குறிப்பிட்டு தங்களுக்கு அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது போக்குவரத்து காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலோ 27.01.2018 முதல் 15.02.2018 தேதிக்குள் பதிவு செய்ய
வேண்டும்.
போட்டி விபரம்:
மேற்கூறியவாறு பதிவு செய்யப்பட்ட நபர்களின் வாகனங்கள் 16.02.2018 முதல் 15.04.2018 வரை தூத்துக்குடி மாவட்டமுழுவதும் கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் காவல் வாகன தணிக்கைகள் மூலம் கண்காணிக்கப்படும். இந்த இரண்டு மாதங்களில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடித்து எவ்வித வழக்குகளிலும் (விபத்து/ குற்றம்/ மோட்டார் விதி மீறல்) உட்படாத நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசு மற்றும் நற்சான்றிதழ் வழங்கவுள்ளதாகவும், இப்போட்டியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்ளுமாறு அந்த குறிப்பில் தெரிவித்துள்ளார்.