சாத்தான்குளம் மேரி இம்மாக்குலேட் மெட்ரிக்குலேசன் பள்ளியில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
முகாமுக்கு சிதம்பராபுரம் பங்குத்தந்தை பபிஸ்டன் தலைமை வகித்து துவங்கி வைத்தார்.முகாமில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைக்குழுவினர் மாணவ,மாணவியருக்கு கண் பரிசோதனை செய்து உரிய ஆலோசனைகளும், வழிகாட்டுதலும் வழங்கினர்.இதில் 240 மாணவ மாணவியரும்,பெற்றோரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை மேரி இம்மாக்குலேட் மெட்ரிக்குலேசன் பள்ளியின் முதல்வரும் தாளளருமான செல்வராயன், அகர்வால் கண் மருத்துவமனை பணியாளர் வேலு ஆகியோர் செய்திருந்தனர்.