தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சுப்புராயபுரத்தைச் சேர்ந்தவர் செண்பகபூபதி(45). இவர் நேற்று இரவு சுப்புராயபுரம் விலக்கில் இருந்து ஊருக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் இவரின் கழுத்தில் கிடந்த 8 பவுண் செயினை பறித்து கொண்டு கண்இமைக்கும் நேரத்தில் இருட்டில் மறைந்தனர். இதுகுறித்து சாத்தான்குளம் போலிசார் வழக்கு விசாரனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதியம் சுமார் 12 மணி அளவில் சாத்தான்குளம் அருகே உள்ள அழகப்பபுரத்தில் ஊரின் வெளிப்புறத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் தங்கலதா(40). இவரிடம் இரண்டு மர்ம நபர்கள் தண்ணீர் பாக்கெட் கேட்டுள்ளனர். அவர் தண்ணீர் பாக்கெட் கொடுக்கும் சமயத்தில் அவரின் கழுத்தில் கிடந்த 7 பவுண் தங்கச்செயினை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு பைக்கில் சிட்டாய் பறந்தனர். இதுகுறித்து தட்டார்மடம் போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம் பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதே போல் தொடர் வழிப்பறி, செயின்பறி சம்பவங்கள் நடந்து வந்தது. மீண்டும் இந்த செயின்பறிப்பு சம்பவம் தலைதூக்க துவங்கியுள்ளதால் சாத்தான்குளம் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
===