சாத்தான்குளம் இராம.கோபால கிருஷ்ண பிள்ளை அரசு கிளை நூலகத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு “என்னைச் செதுக்கிய நூல்கள் எனும் தலைப்பில் வட்டார அளவிலான கல்லூரி மாணவர், மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது.
இதில் ராஜரத்தினம் கல்வியியல் கல்லூரி மாணவி முத்துமாரி லீலாவதி முதல் பரிசும், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மகளிர் உறுப்புக் கல்லூரி மாணவி சலேத் சினேகா 2ஆவது பரிசும், பிறைகுடியிருப்பு சிவந்தி பெண்கள் கலை அறிவியல் கல்லூரி மாணவி நந்தினி மூன்றாவது பரிசும் பெற்றனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, சாத்தான்குளம் வர்த்தக சங்க துணைத் தலைவர் கோ. ஜோதிமணி தலைமை வகித்து போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கினார். வழக்குரைஞர் க. வேணுகோபால் முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜான்லூயிஸ் வரவேற்றார். நூலகர் சுப்பிரமணியன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
இதில், யோகா ஆசிரியை ராஜலட்சுமி, வர்த்தகர் சங்கச் செயலர் மதுரம் செல்வராஜ், ஓய்வு பெற்ற அஞ்சலக அலுவலர் ஈஸ்வர் சுப்பையா ஆகியோர் பேசினர். நூலகர் சித்திரைலிலிங்கம் நன்றி கூறினார்.