சாத்தான்குளம் சி.எஸ்.ஐ. பி.எஸ்.கே. ராஜரத்தினம் நினைவு கல்வியியல் கல்லூரியில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பாதுகாப்பான உணவு முறைகள் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஜெ. ஜெபச்செல்வி தலைமை வகித்தார். சாத்தான்குளம் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி முத்துராஜா இளைய தலைமுறைக்கான பாதுகாப்பான உணவு வகைகள் குறித்து பேசினார். பின்னர் பாதுகாப்பான உணவு வகைகள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவர், மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடைபெற்றது. இதில் 12 மாணவர்கள் கலந்துகொண்டு பேசினர். உணவு பாதுகாப்பு முறைகள், பாதுகாப்பற்ற உணவு வகைகளால் ஏற்படும் பற்றி தீமைகள்குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதில் மாணவர்கள் ஆட்லிலின் பிரின்சஸ், முத்துமாரி, லீலாவதி, மற்றும் மோகன கிருஷணன் ஆகியோருக்கு பரிசு மற்றும் சான்று வழங்கப்பட்டது.
உடன்குடி கணேஷ்குமார் நன்றி கூறினார்.