கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் உலக சுற்றுசூழல் தினவிழாவை கொண்டாடினர்.
நெல்லை மாவட்ட அலுவலர் திருமால் தலைமை வகித்தார். பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல் மரம் வளர்த்தல் பசுமையை பாதுகாத்தல் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் வெ.தீனதயாளன், ஸ்ரீமதி ஆகியோர் பேசினர். நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் மூலமாக கூந்தன்குளம் பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டனர். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல் குறித்து விழிப்புணர்வு பேரணி நிகழ்த்தப்பட்டது. கூந்தகுளம் கிராம பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக், பாலிதீன் குப்பைகள் மாணவர்களால் அகற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி நாட்டுநலப்பணி திட்டஅலுவலர் முனைவர் இராஜாபாபு, உடற்கல்வி இயக்குனர் பார்த்திபன், உதவிப்பேராசிரியர் குமார் மற்றும் கூந்தன்குளம் வனசரகர் மற்றும் வன பாதுகாவலர்கள் கலந்து கொண்டனர். முனைவர் இராஜபாபு அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மைக் கல்லூரி முதல்வர் முனைவர் ராமலிங்கம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட வன அலுவலர் திருமால் ஆகியோர் தலைமையில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.