
தாதன்குளம் அருகே ரயில்வேட் சுரங்க பாதை அமைக்கும் பணி துவங்கியது.
நெல்லை & திருச்செந்தூர் அகல ரயில் பாதையில் தாதன்குளம் ரயில்வே நிலையத்துக்கு கிழக்கே 2 கிலோ மீட்டர் தொலைவில் கிளாக்குளம் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வேகேட் வழியாகத்தான் கிளாக்குளம், குருக்கல்கோட்டை, வல்லகுளம், கால்வாய், திருவரங்கப்பட்டி, கெட்டியம்மாள்புரம், அரியநாயகிபுரம், அரசர்குளம், புதுக்குளம், வசவப்பநேனரி, மல்லல், மணல்விளை, உடையனேரி, தேர்க்கன்குளம், பழனியப்பபுரம் உள்பட பேய்குளம் செல்லவேண்டும்.
ஆனால் இந்த ரயில்வே கேட் ஆளில்லா ரயில்வே கேட்டாக உள்ளது. இந்த கேட் வழியாக மினிபஸ் மற்றும் உள்ளூர் வாகனங்கள் மட்டுமே செல்கிறது. அதுவும் ரயில் விபத்தில் சிக்கும் அவல நிலையில் உள்ளன.
பல முறை இக்கிராம மக்கள் போராடியதில் இந்த இடத்தில் ரயில்வே கேட் அமைக்க ரயில்வே துறை அனுமதித்தது. இதற்கான வேலைகளும் வேகமாக நடந்தது. ஆனால் கடந்த மே மாதம் தீடிரென்று அந்த வேலையும் இடையிலேயே நின்று விட்டது. அங்கு போடப்பட்டிருந்த தளவாட்ட பொருள்கள் எல்லாம் வேறிடத்துக்கு மாற்றப்பட்டது. இதனால் இனி இந்த இடத்தில் ரயில்வே கேட் இல்லை என்ற நிலை ஏற்பட்டது.
இதற்கிடையில் தற்போது இந்த இடத்தில் ரயில்வேசுரங்க பாதை அமைக்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக உயரமான சிமெண்ட் காங்கீரிட் தயார் நிலையில் உள்ளன. தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு, அதன்மீது 10 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்பின் சுரங்க பாதை தோண்ட ராட்சத இயந்திரங்கள் கொண்டு பணி நடக்கிறது. இருபுறமும் கூரை வேயப்பட்ட சாலையில் மழை நீர் தேங்காத நிலையில் கனரக வாகனங்கள் செல்லும் நிலையில் இந்த பாலம் அமைய இருப்பதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.