இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயாஸ் அருள் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, உதவி ஆட்சியர் ஆலோசனையின்படி ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் காலியாக உள்ள 24 கிராம உதவியாளர் பணியிடங்கள் இன சுழற்சி அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி, உள்ளிட்ட தகுதிகள் மற்றும் கூடுதல் விவரங்களை தாலுகா அலுவலக பலகையில் ஒட்டப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த நபர்கள் ஜூலை 12ஆம் தேதிக்குள் மாலை 5.45 மணிக்குள் உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஜூலை 14ம் தேதி காலை 10 மணிக்கு தாலுகா அலுவலகத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் அசல் சான்றிதழுடன் ஆஜராக வேண்டும்.