
கருங்குளம் ஒன்றியம் கால்வாய் கிராமத்தில் முறைகேடு நடந்ததாக அ.ம.மு.க கருங்குளம் ஒன்றிய செயலாளர் மற்றும் முன்னாள் கவுன்சிலர் சிவசுப்பிரமணியன் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.
கால்வாய் ஊராட்சி கால்வாய் மற்றும் திருவரங்கப்பட்டி கிராமத்தில் ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் போலியான நபர்கள் பெயரில் அடையாள அட்டைகளை உருவாக்கி செய்யாத வேலைக்கு செய்ததாக கணக்கு காட்டி போலி நபர்கள் வங்கிக் கணக்குகள் மூலம் அரசுப் பணத்தை கையாடல் செய்கிறார்கள். ஒன்றிய அலுவலகத்தில் எங்களது ஊராட்சிக்கென வழங்கப்பட்ட தெரு விளக்குகளை வெளி மார்க்கெட்டில் விற்று விட்டு மின் கம்பத்தில் மாட்டியதாக கணக்கு காட்டி முறைகேடு செய்துள்ளனர். தனி நபர் கழிவறை திட்டத்தில் கட்டாத கழிவறைகளை கட்டியதாக வேறு இடத்தில் உள்ள கட்டிய கழிவறை முன் போட்டோ எடுத்து அவர்கள் மூலம் அரசுப் பணத்தை கையாடல் செய்துள்ளனர். எனவே பஞ்சாயத்து கிளார்க் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மாவட்ட ஆட்சி தலைவர் சந்திப் நந்தூரியிடம் மனு கொடுத்துள்ளார்.
அவர் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனுவை ஒப்படைத்துள்ளார்.