கருங்குளம் ஒன்றியம் பகுதியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் சுற்று பயணம் செய்தார்.
இவர் தங்களது சமூகத்தினை வேளாண் மரபினர் என அறிவிக்க வேண்டும் எனவும் வருகிற ஜீலை 15ந்தேதி தஞ்சாவூரில் நடைபெறும் மாநாட்டில் மக்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என மக்கள் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பு கருங்குளம், கீழ தூதுகுழி, சந்தையடியூர், செய்துங்கநல்லூர், வி.கோவில்பத்து. கீழநாட்டார்குளம், தெற்கு வெட்டியபந்தி, வள்ளூவர் காலனி, முத்தாலங்குறிச்சி, அனவரதநல்லூர், வசவப்பபுரம், கீழபுத்தனேரி, பக்கபட்டி, வல்லநாடு ஆகிய கிராமங்களில் அவர் மக்களை சந்தித்தார். அவருடன் மாநில துணை தலைவர் நெல்லையப்பன், மாநில செய்தி தொடர்பாளர் சுதாகர், தூத்துக்குடி தெற்கு மாவடட செயலாளர் செல்வம், நெல்லை மாவட்ட இளைஞரணி செயலாளர் கிங்தேவேந்திரன், கருங்குளம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சீனிதேவேந்திரன், உள்பட பலர் உடன் வந்தனர்.