
கருங்குளம் ஒன்றியத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடந்தது.
ஆறாம்பண்ணையில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சேக் அப்துல் காதர் தலைமையில் முன்னள் கவுன்சிலர் இமாம் முன்னிலை வகித்தார். திமுக கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
கொங்கராயகுறிச்சி ஊராட்சி திமுக செயலாளர் அருள்மேயர் தலைமையிலும், பாண்டியன், மயிலேறி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக கொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
ஆழ்வார்கற்குளத்தில் ஊராட்சி செயலாளர் அருண்குமார் முன்னிலையில் ஆழ்வார், முருகன், பாண்டி, சங்கரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் திமுக கொடியேற்றப்பட்டது.
தெற்கு காரசேரியில் ஊராட்சி செயலாளர் மாயாண்டி தலைமையில், தங்கபாண்டி, குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருங்குளத்தில் ஊராட்சி செயலாளர் பரமசிவம் தலைமையில் தியாகராஜன், திருமலை ராகவன், தங்கவேல், சுயம்பு ஆகியோர் முன்னிலையில் திமுக கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
அனைத்து இடங்களிலும் திமுக ஒன்றிய செயலாளர் நல்லமுத்து திமுக கொடியேற்றி வைத்தார். முன்னாள் பொதுகுழு உறுப்பினர் பரமசிவன், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் தியாகராஜன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.