கருங்குளம் ஒன்றியத்தில் உடைக்கப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தினை மீண்டும் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள 31 பஞ்சாயத்துகளில் மிகவும் மோசமாக உடைந்து விழும் நிலையில் இருந்த பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது. ஆனால் இந்த இடத்தில் மீண்டும் புதிய பயணிகள் நிழற்கூடம் கட்டப்படவில்லை. இதுபோலவே கருங்குளம் மூலைக்கரைப்பட்டி சாலையில் கருங்குளம், ஆஸ்பத்திரி, தெற்கு காரசேரி, அரசர்குளம் விலக்கு, வள்ளூவர் காலனி, சேரகுளம், இலுப்பைகுளம், இராமனுஜம்புதூர் உள்பட பகுதியில் பயணிகள் நிழற்குடை ஒருபுறம் உள்ளது மறுபுறம் இல்லை. இதனால் வெயில் மற்றும் மழை காலங்களில் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்.
கருங்குளம் சந்திப்பில் தற்போது கருங்குளம் கொங்கராயகுறிச்சி ஆற்றுபாலம் அருகே திருச்செந்தூர் மெயின் ரோட்டில் இருபுறமும பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.
செய்துங்கநல்லூர் – வசவப்பபுரம் சாலையில் நாட்டார்குளம், விட்டிலாபுரம் விலக்கு, அனவரதநல்லூர், பசும்பொன் நகர் உள்பட பல இடங்களில் பயணிகள் நிழற்கூடம் இன்றி பயணிகள் தவிக்கிறார்கள்.
இதுகுறித்து ஆறாம்பண்ணை சேக்அப்துல்காதர் கூறும் போது, பெரும்பாலுமே கருங்குளம் ஒன்றியத்தில் கருங்குளம் – மூலைக்கரைப்பட்டி சாலை, வல்லநாடு – கொங்கராயகுறிச்சி சாலை, செய்துங்கநல்லூர் – வசவப்பபுரம் சாலை, வசவப்பபுரம் சென்னல் பட்டி சாலை, வல்லநாடு – கலியாவூர் சாலை, தெய்வச்செயல்புரம்- பூவாணி சாலை, எல்லைநாயக்கன்பட்டி – செக்காரக்குடி சாலை, தெய்வச்செயல்புரம் – புதுப்பட்டி சாலைகள் மிக முக்கியமான சலையாகும். இந்த சாலைகளில் பல கிராமங்கள் உள்ளன. பஸ் போக்குவரத்தும் காணப்படுகிறது. இங்குள்ள பல ஊர்களில் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பல மோசமான பயணிகள் நிழற்கூடை அகற்றப்பட்டது. தற்போது அந்த இடங்களில் மீண்டும் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை கருங்குளம் சத்திரத்தில் தற்போது கட்டப்பட்டுள்ள பாலம் அருகே மெயின் ரோட்டில் இருபுறமும் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக இதற்கான நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்று அவர் கூறினார்.
அகற்றப்பட்ட இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்து, அவசியமான புதிய இடங்களிலும் உடனடியாக நிழற்குடை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எம்.எல்.ஏ எம்.பி நிதி
தற்போது அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக உள்ளூர் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி களிலும் தேவைகளை கொண்டு செல்ல முறையான நபர்கள் இல்லை. எனவே மக்கள் தேவைகளை கண்டறிய அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து அடிப்படை தேவைகளை அவர்கள் நிதி மூலம் நிறைவேற்றி தரவேண்டும்