கருங்குளத்தில் உயிர் பலி வாங்க துடிக்கும் குளத்தினால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கருங்குளம் கிராமம் வளர்ந்து வரும் கிராமமாகும். இந்த கிராமத்தில் அதிகமான வழிபாட்டு தலங்கள் உள்ளன. தென்திருப்பதி என போற்றப்படும் வகுளகிரி சேத்திர வெங்கிடாசலபதி கோயில், தம்பதி சகிதமாய் உள்ள நவகிரகம் உள்ள பழமையான குலசேகர நாயகி சமேத மார்த்தாண்டேஸ்வரர் ஆலயம் உள்பட பல ஆலயங்கள் இங்கு உள்ளன. இந்த சாலைக்கு செல்லும்ம வழியில் சாலையோரத்தில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்துக்கு தடுப்பு சுவர் இல்லாத காரணத்தினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த குளத்து கரையில் உள்ள கருங்குளம் மூலைக்கரைப்பட்டி சாலையில மிக அதிகமான போக்குவரத்து காணப்படுகிறது.
கருங்குளம், தாதன்குளம், தெற்கு காரசேரி, சேரகுளம், ராமனுஜம்புதூர், பேய்குளம், முனைஞ்சி பட்டி, மூலைக்கரைப்பட்டி, நான்குநேரி உள்பட பல கிராமங்களுக்கு இந்தசாலை வழியாத்தான் போக்குவரத்து நடைபெறுகிறது. இங்கு தினமும் 500க்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் கல்கோரியில் இருந்து லோடு ஏற்றி வரும் வாகனங்கள் இந்த குளத்துக்கு பாய்ந்து விபத்துக்குள்ளாகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதுபோன்ற விபத்தில் டிரைவர் உயிரிழந்தார். அதோடு மட்டுமல்லாமல் திருமண மண்டம் போன்ற மக்கள் கூடும் இடமும் இந்த சாலையில்தான் உள்ளது. இந்த சாலையில் வலது புறம் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தின் கரையை மேம்படுத்தி தோட்டம் அமைத்து அழகு படுத்த அரசு திட்டமிட்டு பணி ஆரம்பித்தது. தற்போது அந்த வேலை முடிவடையும் முன்பு மழை காலம் வந்து விட்டது. எனவே தற்போது சாலையும் குளம் ஒன்று போலவே காணப்படுகிறது. இந்தசாலையில் செல்லும் வாகனமோ, பாதசாரிகளோ. இதில் நடந்து செல்லும் போது தவறி குளத்துக்குள் விழுந்து விடக்கூடாது. எனவே இந்த கரையை மேம்படுத்தி பயணிகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.