சாத்தான்குளத்தில் கம்யூட்டர் வகுப்புக்கு சென்ற மாணவி திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள இரட்டைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் (47) .இவர் சாத்தான்குளத்தில் கார் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவரது மகள் மணிஷா (22) பிளஸ்டூ படித்து முடித்து ஈரோட்டில் ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். பின்னர் கடந்த 3மாதத்திற்கு முன் ஊருக்கு வந்த இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.
பின்னர் சாத்தான்குளம் பெட்ரோல் பல்க் அருகில் உள்ள கம்யூட்டர் சென்டரில் படித்து வந்தார். கடந்த 21ஆம்தேதி கம்யூட்டர் சென்டர் சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்க போனார் என தெரியவில்லை.இதுகுறித்து அவரத தாயார் ஜெயராணி (40) சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் எஸ்.ஐ,. ஆழ்வார் வழக்குபதிந்தார். இன்ஸ்பெக்டர் பொறுப்பு) ரேணியஸ் ஜேசுபாதம் விசாரணை நடத்தி வருகிறார்.