ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் தை அமாவாசை திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோகோயில் தை அமாவாசை திருவிழா கடந்த 7ம்தேதி தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை பூஜைகளும் மற்றும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி கோயில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
பத்தாம் திருவிழாவான இன்று தை அமாவாசை தினத்தை முன்னிட்டு மதியம் 1 மணிக்கு சுவாமி உருகு பலகையில் எழுந்தருளி அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு இலாமிச்ச வேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலக் காட்சி நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தாமிரபரணி நதியில் புனித நீராடி வழிபட்டனர். இதனை முன்னிட்டு திருநெல்வேலி, திருச்செந்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.