
தூத்துக்குடி மாவட்டம் இருவப்பபுரம் பூரண புஷ்கலா சமேத பெரும்படை சாஸ்தா கோயில் வருஷாபிசேகம் வருகிற நாளை (25 ந்தேதி) நடைபெறுகிறது.
இதையொட்டி அதிகாலை மங்கள இசை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம் உள்பட ஹோமங்கள் நடைபெறுகிறது. அதன் பிறகு கடம் புறப்பாடு நடந்து. பெரும்படை சாஸ்தா உள்பட பரிவார தெய்வங்களுக்கு விமான அபிசேகம் நடைபெறும். தொடர்ந்து மகாஅபிசேகம் நடைபெறும். தொடர்ந்து புஸ்ப அலங்காரம் நடைபெறும். அதன்பின் சிறப்பு ஆராதனை நடைபெறும். மதியம் 1 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை இருவப்பபுரம் பெரும்படை சாஸ்தா வருஷாபிசேக விழாக்கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.