செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து எஸ்.என்.பட்டி சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடந்தது. கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் கிரி தலைமை வகித்தார். பணி மேற்பார்வையாளர் பீர் முகம்மது, ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வசந்த் வரவேற்றார்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் 20 லட்ச ரூபாயில் சமுதாய நலக்கூடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தினை திறந்து வைத்து ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சண்முகநாதன் பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், முன்னாள் வார்டு உறுப்பினர் சுப்பையா பாண்டியன். செய்துங்கநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கன்னையா, ஸ்ரீவைகுண்டம் முன்னாள் சேர்மன் ஆறுமுகநயினார், முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணியன், கதிரேசன், அண்ணாமலை, சுடலைமுத்து, திருவரங்கம் உள்படபலர் கலந்து கொண்டனர். பஞ்சாயத்து கிளார்க் சங்கரபாண்டியன் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை எஸ்.என்.பட்டி ஊர் மக்கள் செய்திருந்தனர்.