எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு ஆதிச்சநல்லூர் நாயகன் எனும் விருது வழங்கப்பட்டது.
செய்துங்கநல்லூரில் வசித்து வருபவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. இவர் ஆதிச்சநல்லூரில் தொடர்ந்து ஆய்வு நடத்த வேண்டும். 2004 ல் நடந்த ஆய்வு அறிக்கையை வெளியிட வேண்டும். ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என மூன்று கோரிக்கையை வலியுறுத்தி மதுரை ஐகோர்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் வழக்கறிஞர் அழகு மணி வாதாடினார். நீதியரசர்கள் கிருபாகரன், தாரணி அடங்கிய பெஞ்ச இந்த வழக்கில் நல்லதொரு தீர்ப்பை தந்துள்ளனர். இதன் படி ஆய்வறிக்கை தாக்கல் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. ஆய்வு செய்த சத்தியமூர்த்தி ஆஜரானார். அவர் அறிக்கையில் மூன்றில் ஒரு பங்கை கோர்டில் தாக்கல் செய்து விட்டார். கார்பன்டேட்டிங் செய்ய மத்திய மாநில அரசு உதவி செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும் நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் வெங்கடேஷ் அவர்கள் ஏற்பாடில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அவர்கள் ஆதிச்சநல்லூர் பரம்பு அருகில் கட்டப்பட்ட புளியங்குளம் முதுமக்கள் தாழி தகவல் மையத்தில் புகைப்பட கண்காட்சி வைக்க ஏற்பாடு செய்து வருகிறார். நவம்பர் 20 ந்தேதி இங்கு வந்த அமைச்சர் பாண்டியராஜன் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்கு 2 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்திருப்பதாகவும் தகவல் தெரிவித்தார். அமெரிக்க புளோரிடா தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் சம்பத்குமார் ஆதிச்சநல்லூர் வருகை தந்தார், அவர் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைக்க அமெரிக்க தமிழ்ச்சங்கம் உதவிபுரியும் என தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அகழ்வாராய்ச்சி செய்ய மத்திய அரசு முடியாது என வழக்கில் பதில் கூற, மாநில அரசுக்கு அனுமதி கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதியரசர்கள் அவர்கள் வழக்கறிஞர்களை வலியுறித்தி, இந்த வழக்கை மார்ச்சு 6ந் தேதி ஒத்தி வைத்துள்ளார்.
இதற்கிடையில் தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் சார்பில் நாசரேத் ஜோதி மாளிகையில் நடந்த விழாவில் ஆதிச்சநல்லூர் ஆய்வுகளை வெளி கொண்டு வர ஏற்பாடு செய்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவை பாராட்டி அவருக்கு ‘ஆதிச்சநல்லூர் நாயகன்’ என விருது வழங்கி கௌரவித்தனர்.
மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தலைமையில் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஜோதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் காவல்நிலைய ஆய்வாளர் வெங்கடேசன் விருதை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நாசரேத் காவல்நிலைய ஆய்வாளர் ரேனியஸ் ஜேசுபாதம் நெல்லை தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேணுகோபால், மாவட்ட கௌரவ தலைவர் விஜயராஜா, மாநில துணைத்தலைவர் நிக்சன், ஐ.ஜே,யூ அமைப்புகளின் தாய் சசிகலா தேவி, டூயூட்டி ஆன்லைன் செய்தியாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் குமாரவேல் நன்றி கூறினார்.