கிள்ளிக்குளம் வேளாண்மைக்கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடந்தது.
இந்த முகாமில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, தூய்மை பாரதம் குறித்த விழிப்புணர்வு பேரணி, மரம் நடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.
அதன்பின்னர் இராமானுஜம்புதூர் அரசுமேல்நிலைப்பள்ளி 7,8,9 மாணவ மாணவிகளுக்கு கணினி பயிற்சியும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மேல்படிப்புகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது.
அதன்பின்னர் மாலை 2 மணிக்கு நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாம் அரங்கில் பாபநாசம் உலகத்தமிழ் மருத்துவகழக தலைவர் மைக்கேல் ஜெயராசு நிறைவாழ்வுக்கு சித்தமருத்துவம் என்ற தலைப்பில் சிறப்பு வகுப்பு நடத்தினார். அதன்பின்னர் இராமானுஜம்புதூர் பள்ளி வளாகத்தில் மூலிகைச் செடிகளை நாட்டுநலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் நட்டனர்.
மாலை 4 மணிக்கு வேளாண்மைக் கல்லூரி வேளாண் நுண்ணறிவியல் உதவி பேராசிரியர் முனைவர் ஜெபர்லின் பிரபினா மண்புழு உரம் தயாரித்தல் குறித்த செயல்முறை விளக்கத்தை விவசாயிகளிடம் எடுத்துரைத்தார். அதன்பின் கருங்குளம் உதவி வேளாண்மை இயக்குநர் சரவணன் பயிர் காப்பீடு குறித்து விளக்கினார். வேளாண்மை கல்லூரி உணவியல் இணை பேராசிரியர் முனைவர் சாந்தி உணவு பதப்படுத்துதல் குறித்து சிறப்பு வகுப்பு நடத்தினார்.
இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை வேளாண்மைக் கல்லூரி நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர்கள் முனைவர்கள் ராஜாபாபு, முனைவர் சோபா ஆகியோர் செய்திருந்தனர்.
===