கடலோரகாவல், கப்பல்படை தேர்வு மீனவ இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் என்.வெங்கடேஷ அறிவித்துள்ளார்.
கடலோர காவல், கப்பல்படை தேர்வுகளில் தேர்ச்சி பெற சிறப்பு பயிற்சி பெற விரும்பும் மீனவ இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த பிளஸ் 2 அல்லது அதற்கு மேல் படித்த மீனவர், மீனவர்களுடைய வாரிசுகள், இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கப்பல்படை ஆகியவற்றில் நவிக்,மாலுமி பணிகளுக்கு நடத்தப்படும் தகுதி தேர்வுகளில் எளிதாக தேர்ச்சியடைந்து வேலைவாய்ப்பு பெற வசதியாக மீனவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளித்து வருகிறது. இந்த பயிற்சி மூன்று மாதகாலம் நடைபெறும்.
பயிற்சியின் போது பயிற்சி பெறும் மீனவஇளைஞர்களுக்கு மாதம் ரூ.1,000/- மூன்று மாத காலத்திற்கு வழங்கப்படும். அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கப்பல் படை, கடலோர காவல் படையில் சேருவதற்கான பயிற்சி நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் மீனவர், மீனவர்கள் வாரிசுதாரர்கள் தேர்வு செய்திட பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்கள் தூத்துக்குடி மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ இளைஞர்கள் சிறப்பு பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளோர் விண்ணப்பத்தை பெற்று மார்ச்10-ம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தூத்துக்குடி மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்க வேண்டும.; மேலும், விபரங்களுக்கு (0461-2320458) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்கள்.