ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் அருள்மிகு இளையநயினார் கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
இத்திருக்கோயிலில் மூலவராக முருகன் வள்ளி, தெய்வானையுடன் இளையநயினார் என்ற பெயரில் மயில் மீது வீற்றிருக்கிறார்.
இக்கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம், பூர்ணாஹுதி தீபாராதனை முதலியன நடைபெற்றன. தொடர்ந்து, விமான அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.