
பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக தூய்மை பணியில் ஏழ நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது
இன்று ஆறாம் பண்னையில் உள்ள பண்னை மகாலில் வைத்து இலவச கண், சர்க்கரை நோய் மற்றும் பல் பரிசோதனை நடைபெற்றது. இம் முகாமில் அகர்வால் கண் மருத்துவ குழுவினர், கிருபா பல் மருத்துவ குழுவினர் மற்றும் Dr.மோகன் மருத்துவ குழுவினர் பங்கு எடுத்த இந்த முகாமில் ஆறாம்பண்னை, அரபாத் நகர், மற்றும் நடுவக்குறிச்சியை சார்ந்த 100க்கு மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
முன்னாதாக இந்நிகழ்ச்சியை முகைதீன் பள்ளியின் செயலாளர் மொன்னா முகம்மது துவக்கி வைத்த இந்நிகழ்ச்சிக்கு பள்ளிவாசல் இமாம் அப்துல் காதர் ஹமீதி ஜமாத் பிரமுகர்கள் முகமது அலி, இப்ராஹீம், சேக் ஆகியோர் முன்னிலை வைத்தனர் இந்நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் பேராசிரியர் சாகுல் ஹமீது, அப்துல் ரஹ்மான், மற்றும் முகம்மது எஹ்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனார்