
ஆதிச்சநல்லூரில் நாசரேத் மர்க்காஸிஸ் கல்லூரி தமிழ்துறை மாணவர்கள் ஆய்வு செய்தனர்.
உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படுவது ஆதிச்சநல்லூர். இங்கு பல காலகட்டங்களில் ஆய்வு நடந்தது. இங்கு நாசரேத் மர்க்காஸிஸ் கல்லூரி தமிழ் துறை மாணவர்கள் ஆய்வு செய்ய வந்தனர். இவர்களுக்கு வழிகாட்டுதலுக்காக எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கலந்து கொண்டு வழிநடத்தினார். 2004ம் ஆண்டு ஆய்வு நடந்த இடம், புதிதாக கட்டப்பட்ட அருங்காட்சியகம், ஆற்றங்கரையில் உள்ள பாண்டு ராஜா கோயில் ஆகியவற்றை மாணவர்கள் ஆய்வு செய்தனர். அங்கு உடைந்து கிடந்த ஓடுகளையும் அவர்கள் பார்வையிட்டனர். இதில் சுமார் 35 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழ் துறை தலைவர் அந்தோணி செல்வகுமார் தலைமையில் பேராசிரியர்கள் பிரவீன் பீட்டர், செரின் லாரன்ஸ், ஜுலியட் கீதா, ராஜ லெட்சுமி உள்பட கல்லூரி நிர்வாகம் செய்திருந்தனர்.