ஆழ்வார்திருநகரியில் கவிஞர் வைரமுத்துவை கண்டித்து மாபெரும் கண்டன பேரணி நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
ஆண்டாள் பற்றி தவறான கருத்துக்களை கவிஞர் வைரமுத்து பேசியதாகவும், அதனை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியில் கண்டனம் தெரிவித்து 70க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கண்டன பேரணி நடந்தது.
இந்த கண்டன பேரணியை ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் துவக்கி வைத்தார். பேரணியில் வைரமுத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. பேரணி ஆழ்வார்திருநகரி வடக்குமாடவீதி, தெற்குமாடவீதி, தேரடி வீதி சுற்றி ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் நம்மாழ்வார் கோவில் முன்பு நிறைவடைந்தது.